விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் MCQ Questions

1.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

ஒளவையார் ஆத்திசூடி பாடினார் -

A.

ஒளவையார் ஆத்திச்சூடியைப் பாடினாரா?

B.

ஔவையார் எதனை பாடினார்?

C.

ஆத்திச்சூடியைப் பாடியவர் ஒளவையாரா?

D.

ஒளவையார் பாடிய நூல்கள் யாவை?

ANSWER :

B .ஔவையார் எதனை பாடினார்?

2.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

"இயற்கையைச் சார்ந்தே மனம் இயங்குகிறது" -

A.

மனம் இயங்குகிறது என்றால் என்ன?

B.

மனம் இயங்குகிறதா?

C.

இயற்கையாக மனம் இயங்குகிறதா?

D.

மனம் எதைச்சார்ந்து இயங்குகிறது?

ANSWER :

D .மனம் எதைச்சார்ந்து இயங்குகிறது?

3.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

உழைத்தவர் உண்ண முடியும். -

A.

உண்ண உழைக்க வேண்டுமா?

B.

எதைச் செய்ய வேண்டும்?

C.

யார் உண்ண முடியும்?

D.

உழைத்தவர் உண்ண முடியுமா?

ANSWER :

C .யார் உண்ண முடியும்?

4.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

ஊரோடு ஒத்து வாழ வேண்டும் -

A.

யாரோடு ஒத்து வாழ வேண்டும்?

B.

ஊரோடு ஒத்து வாழ வேண்டுமா?

C.

எவ்வாறு வாழ வேண்டும்?

D.

எதனோடு ஒத்து வாழ வேண்டும்?

ANSWER :

A .யாரோடு ஒத்து வாழ வேண்டும்?

5.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

ஆம், இரயில் சரியான நேரத்தில் புறப்பட்டது -

A.

இரயில் சரியான நேரத்தில் புறப்பட்டதா?

B.

இரயில் எப்படிப் புறப்பட்டது?

C.

எப்படி இரயில் புறப்பட்டது?

D.

இரயில் எப்பொழுது புறப்பட்டது?

ANSWER :

A .இரயில் சரியான நேரத்தில் புறப்பட்டதா?

6.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை -

A.

தமிழ்நாட்டின் தலைநகரம் எங்கு உள்ளது?

B.

தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

C.

சென்னை எதற்குத் தலைநகரம்?

D.

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைதானா?

ANSWER :

B .தமிழ்நாட்டின் தலைநகரம் எது?