பிழைதிருத்தம் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

பிழைதிருத்தம் MCQ Questions

1.
ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A.
அது இங்கே உள்ளவை
B.
அவை இங்கே உள்ளது
C.
அவை இங்கே உள்ளன
D.
அது இங்கே உள்ளன
ANSWER :
C .அவை இங்கே உள்ளன
2.
மரபுப் பிழையை நீக்குக
A.
குயில் கத்தக் காகம் காகா என்றது
B.
குயில் கூவக் காகம் கரைந்தது
C.
குயில் கத்தக் காகம் கூவியது
D.
குயில் கூவக் காகம் கத்தியது
ANSWER :
B .குயில் கூவக் காகம் கரைந்தது
3.
பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதுக
A.
சகல மக்களும் வந்தனர்
B.
சகல ஜனங்களும் வந்தனர்
C.
சகலவாசிகளும் வந்தனர்
D.
மக்கள் அனைவரும் வந்தனர்
ANSWER :
D .மக்கள் அனைவரும் வந்தனர்
4.
ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A.
பஞ்சபாண்டவர் ஐவருமே சிறந்தவன்
B.
பஞ்சபாண்டவர்கள் ஐவருமே சிறந்தவன்
C.
பஞ்சபாண்வர்கள் ஐவருமே சிறந்தவர்கள்
D.
மேற்கூறிய ஏதுவுமில்லை 38. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
ANSWER :
C .பஞ்சபாண்வர்கள் ஐவருமே சிறந்தவர்கள்
5.
ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A.
மாடு மேய்ந்தன பயிரை
B.
மாடு பயிரை மேய்ந்தன
C.
மாடுகள் பயிரை மேய்ந்தது
D.
மாடுகள் பயிரை மேய்ந்தன
ANSWER :
D .மாடுகள் பயிரை மேய்ந்தன
6.
வழூஉச் சொற்களை நீக்குக
A.
தென்னை ஓலையால் கீற்று முடைந்தான்
B.
தென்னை இலையால் கீத்து பின்னினான்
C.
தென்ன ஓலையால் கீத்து பின்னினான்
D.
தென்னை இலையால் கீற்று முடைந்தான்
ANSWER :
A .தென்னை ஓலையால் கீற்று முடைந்தான்