வேர்ச்சொல்லைக் கொடுத்து -வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

வேர்ச்சொல்லைக் கொடுத்து -வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல் MCQ Questions

1.
'படி' என்ற சொல்லின் தொழிற் பெயரைக் கண்டுபிடி
A.
படித்து
B.
படித்த
C.
படித்தவன்
D.
படித்தல்
ANSWER :
D .படித்தல்
2.

உழு என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.

A.

உழுது

B.

உழுதார்

C.

உழுதல்

D.

உழுத

ANSWER :

B .உழுதார்

3.
கல் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக:
A.
கற்று
B.
கற்றார்
C.
கற்ற
D.
கற்றவன்
ANSWER :
D .கற்றவன்
4.
சுடு என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
A.
சுட்டான்
B.
சுட்ட
C.
சுடுதல்
D.
சூடு
ANSWER :
C .சுடுதல்
5.
மகிழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A.
மகிழ்ந்தவன்
B.
மகிழ்ந்து
C.
மகிழ்க
D.
மகிழ்தல்
ANSWER :
A .மகிழ்ந்தவன்
6.
'கட்டு' என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் தேர்க
A.
கட்டுவான்
B.
காட்டல்
C.
கட்டினாள்
D.
கட்டல்
ANSWER :
D .கட்டல்