1.
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையளி (Question 1-10):
இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்திருக்கிறது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த வேண்டும் என்பது 140 கோடி இந்தியர்களின் கனவு. நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியும், ஒலிம்பிக் போட்டியும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகள் மட்டுமல்ல, சர்வதேச அளவில் பார்வையாளர்களையும்,போட்டியாளர்களையும் ஈர்க்கும் நிகழ்வும்கூட.
ஒரு நாட்டின் வளர்ச்சியையும், பொருளாதார வலிமையையும் உலகுக்கு வெளிச்சம் போடும் நிகழ்வாக ஒலிம்பிக் போட்டியை வளர்ச்சியடைந்த நாடுகள் கருதுகின்றன.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக் மூலம் சர்வதேச அரங்கில் தன்னை வலிமையான பொருளாதாரமாக சீனா அறிவித்துக் கொண்டது என்பது ஓர் எடுத்துக்காட்டு.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வெற்றிப் பதக்கங்கள் அதிகரித்து வருகின்றன என்றாலும். நமது பொருளாதார வளர்ச்சிக்கும், மக்கள்தொகை பெருக்கத்திற்கும் ஏற்ப அவை இல்லை என்பதை மறுப்பதற்கில்லை. இதுவரை இந்தியா ஒலிம்பிக் போட்டியில் மொத்தமாக வென்றிருக்கும் பதக்கங்கள் 50-க்கும் கீழே. அமெரிக்காவும் ஜெர்மனியும் தலா 2,000, 1,000 பதக்க எண்ணிக்கையைக் கடந்திருக்கின்றன. சீனாவும், பிரேஸிலும்கூட 700, 150 பதக்கங்களுக்கு மேலே வாரிக் குவித்துவிட்டன. அப்படியிருக்கும்போது, இந்தியாவில் பெரும் ஆடம்பரச் செலவில் ஒலிம்பிக் போட்டியை நடத்தி, அதிக அளவில் பதக்கங்கள் பெறாமல் போனால், நாம் சர்வதேச ஏளனத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்படும்.
2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா எந்த அமைப்பிடம் விருப்பம் தெரிவித்துள்ளது?