11.
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையளி(Question 11-20) :
ஆண்டுதோறும் நவம்பர் 14-ஆம் தேதி சர்க்கரை நோய் விழிப்புணர்வு உலக சுகாதார நிறுவனம் (WHO), சர்வதேச அமைப்பான ‘என்சிடி ரிஸ்க்' ஆகியவற்றின் சார்பில் 200 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரவுகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் புள்ளிவிவரங்கள் 'தி லான்செட்' மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் 2022-ஆம் ஆண்டில் 82.8 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற புள்ளிவிவரம் கவலையை ஏற்படுத்துகிறது. அவர்களில் 25%-க்கும் மேற்பட்டோர் (21.2 கோடி பேர்) இந்தியர்கள். நமக்கு அடுத்தபடியாக சீனாவில் 14.8 கோடி, அமெரிக்காவில் 4.2 கோடி, பாகிஸ்தானில் 3.6 கோடி பேர் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1990-இல் இருந்ததை விட இப்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது கவலை தரும் அம்சமாகும். கடந்த 30 ஆண்டுகளில் குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 7 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதில் மிகவும் அச்சம் கொள்ளவேண்டிய விஷயம், உலகம் முழுவதும் 30 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய 44.5 கோடி பேர் (சுமார் 60%) சர்க்கரை நோய்க்கான சிகிச்சை பெற முடியாதவர்களாக உள்ளனர் என்பதுதான். இதில் மூன்றில் ஒரு பங்கான 13.3 கோடி பேர் இந்தியாவில் வசிப்பவர்கள். இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 30 லட்சம் பேருக்கு கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?