அரசு சார்ந்த செய்திகள், கட்டுரைகள் வாசித்தல் ,புரிந்து கொள்ளும் திறன், ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன் TNPSC Group 4 VAO Questions

அரசு சார்ந்த செய்திகள், கட்டுரைகள் வாசித்தல் ,புரிந்து கொள்ளும் திறன், ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன் MCQ Questions

1.
அரசு சார்ந்த செய்திகள் (Question 1-10):
பல்வேறு மாநிலங்கள் உருவான 'தினத்தையொட்டி (நவம்பர் 1) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956-இன்படி மதராஸ் மாகாணத்தில் இருந்து மொழிவாரியாக ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் அதே ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி பிரிக்கப்பட்டது. அதே தினத்தில் மத்திய பிரதேசம் தனி மாநிலமாகவும் லட்சத்தீவு யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்பட்டது. அதேபோல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்கள் கடந்த 1966, நவம்பர் 1-ஆம் தேதி உருவாக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் கடந்த 2000-ஆம் ஆண்டு இதே தேதியில் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக உருவானது. இந்நிலையில், இந்த உருவான தினத்துக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாழ்த்து தெரிவித்து திரௌபதி முர்மு வெளியிட்ட பதிவில், ஹரியாணா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரம்,கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மக்கள் அமைதியும் வளமும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்.
நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் உங்களின் பங்களிப்பு தொடர் வேண்டும் என விரும்புகிறேன்' என குறிப்பிட்டார்.

மாநில மறுசீரமைப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
A.
1947
B.
1956
C.
1966
D.
2000
ANSWER :
B. 1956
2.
மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மதராஸ் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று அல்லாதது எது?
A.
ஆந்திரா
B.
தமிழ்நாடு
C.
கர்நாடகம்
D.
கேரளம்
ANSWER :
B. தமிழ்நாடு
3.
1966-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி உருவான மாநிலம் எது?
A.
ஹரியாணா
B.
உத்தரப்பிரதேசம்
C.
ராஜஸ்தான்
D.
தமிழ்நாடு
ANSWER :
A. ஹரியாணா
4.
2000-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி உருவான மாநிலம் எது?
A.
உத்தரகாண்ட்
B.
சத்தீஸ்கர்
C.
ஜார்க்கண்ட்
D.
தேலுங்கானா
ANSWER :
B. சத்தீஸ்கர்
5.
நவம்பர் 1-ஆம் தேதி எவை உருவான தினமாக கொண்டாடப்படுகிறது?
A.
மொழிவாரியான மாநிலங்கள்
B.
புதிய யூனியன் பிரதேசங்கள்
C.
புதிய நாடுகள்
D.
சட்ட திருத்த தினம்
ANSWER :
A. மொழிவாரியான மாநிலங்கள்
6.
லட்சத்தீவு எந்த ஆண்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது?
A.
1950
B.
2000
C.
1966
D.
1956
ANSWER :
D. 1956