11.
அரசு சார்ந்த செய்திகள் (Question 11-20):
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியில் இளம் தலைமுறையினரை ஈர்க்க, சமூக ஊடகங்களில் புதிய உத்திகளுடன் விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரைவு வாக்காளர் பட்டியல் மாநிலம் முழுவதும் கடந்த 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் சேர்க்கவோ, பெயரை நீக்கவோ, முகவரியை மாற்றவோ அதற்குரிய விண்ணப்பங்களை அளிக்கலாம். தமிழகத்தில் இளம்வாக்காளர்கள் அதிகரித்துள்ள நிலையில், அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாநில தேர்தல் துறை எடுத்து வருகிறது. சமூக ஊடகங்களில் இளைஞர்கள் பெருமளவு களமாடி வரும் நிலையில், அதன் வழியே வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தப் பணிகளுக்கு விழிப்புணர்வு விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ஆறு வகையான தன்மைகளுடன் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விடியோக்கள்-போஸ்டர்கள்: திருத்தப்பணிகள் முடிவடையும் காலம் வரையில் விளம்பரங்கள் செய்யப்படவுள்ளன. இளைஞர்களைக் கவரும் வகையிலான போஸ்டர்கள் வாரத்துக்கு நான்கும், குறு விடியோக்கள் வாரத்துக்கு மூன்றும் தயாரித்து தேர்தல் துறையின் இணையதளத்தில் (elections.tn.gov.in) வெளியிடப்பட உள்ளன.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எந்த தேதியில் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது?