Thirukkural-Relevance to Everyday Life TNPSC Group 2 2A Questions

Thirukkural-Relevance to Everyday Life MCQ Questions

13.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று சொல் இக்குறளில் 'நயன்' என்ற சொல் குறிப்பது?
A.
இன் சொல்
B.
வாய்மை
C.
 நீதி
D.
அறம்
ANSWER :
C . நீதி
14.
எது இரண்டும் அணிகலன்கள் என வள்ளுவர் கூறுகிறார்?
A.
இன்சொல், அறம்
B.
பணிவு, ஒழுக்கம்
C.
பணிவு, இன்சொல்
D.
இனியவைகூறல், கூடா ஒழுக்கம்
ANSWER :
C .பணிவு, இன்சொல்
15.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

இக்குறளில் 'படிறு' என்பதன் பொருள்?

A.

 வஞ்சனை

B.

முயற்சி

C.

வளர்ச்சி

D.

கொடிய சொல்

ANSWER :

A . வஞ்சனை

16.
எல்லோரிடத்திலும் இன்பத்தை உண்டாக்கும் இனிய சொற்களை பேசுபவர்களுக்கு கிடைக்கும் பயன் யாது?
A.
இன்பம் துன்பம் சமமாக இருக்கும்
B.
இன்பம் மட்டுமே முழுமையாக இருக்கும்
C.
வறுமை என்ற துன்பம் வந்த பின் நீங்கிவிடும்
D.
வறுமை என்னும் துன்பம் இல்லை
ANSWER :
D .வறுமை என்னும் துன்பம் இல்லை
17.

யார் ஒருவர் செல்வத்தினை போற்றி காப்பாற்றி பின்னர் இழந்து தற்போது ஒன்றுமில்லை என்று துன்பம் அடைவர்  என வள்ளுவர் கூறுகிறார்?

A.

தீய வழியில் பொருள் சேர்த்தவர்

B.

விருந்தோம்பலின் மூலம் பயனடைந்தோர்

C.

நல்ல விருந்தினரைப் பேணி  வேள்விப் பயன் அடையாதவர்

D.

அறம் செய்தோர்

ANSWER :

A .தீய வழியில் பொருள் சேர்த்தவர்

18.
எந்த ஒரு தன்மை  அறிவில்லாதவரிடம்  காணப்படும் என வள்ளுவர் கூறுகிறார்?
A.
செல்வம்  பெற்றிருந்தும் விருந்தினரைப் பேணாமல் இருப்பது
B.
விருந்தினரை மதிக்காமல் இருத்தல்
C.
வறுமையிலும்  விருந்தினரை பேணுதல்
D.
அனைத்தும்
ANSWER :
A .செல்வம்  பெற்றிருந்தும் விருந்தினரைப் பேணாமல் இருப்பது