2019 TNTET Paper 2-Mathematics and Science TET Question Paper

2019 TNTET Paper 2-Mathematics and Science TET Questions

31.
ஒரு செய்யுளிலுள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்ச்சிக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்ளும் முறைக்கு _______________என்று பெயர்.
A.
ஆகுபெயர்
B.
வழாநிலை
C.
வழுவமைதி
D.
பொருள்கோள்
ANSWER :
D. பொருள்கோள்
32.
தமிழில் 'தம்' வரிசை எழுத்துக்களுடன் சேர்ந்து வராமல் பிரமெய்யெழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து வரும் மெய்யெழுத்துகள் :
A.
ய்,ள்
B.
ர், ழ்
C.
ப், ங்
D.
க்,ழ்
ANSWER :
B. ர், ழ்
33.
பெருஞ்சித்திரனார் நடத்தாத இதழ் யாது ?
A.
தென்மொழி
B.
தாய்மொழி
C.
தமிழ்ச்சிட்டு
D.
தமிழ்நிலம்
ANSWER :
B. தாய்மொழி
34.
பெரியபுராண இயற்கை காட்சியில் வாளை மீன்கள் எம்மரங்களினூடே பாய்ந்தோடும் ?
A.
கடம்ப மரம்
B.
அரசமரம்
C.
தென்னை
D.
கமுகு
ANSWER :
D. கமுகு
35.
இவற்றுள் ஒன்று மட்டும் சரியானது :
A.
மகிமா- காற்றில் மிதக்கும் ஆற்றல்
B.
கரிமா- வரையறையற்று விரித்து படரும் ஆற்றல்
C.
ஈ சத்துவம் -எங்கும் வியாபித்திருக்கும் ஆற்றல்
D.
காமாவசாயித்வம் விரும்பியதை முடிக்கும் ஆற்றல்
ANSWER :
D. காமாவசாயித்வம் விரும்பியதை முடிக்கும் ஆற்றல்
36.
இளைதாக முள் மரம் கொல்க களையு நர்
கைக்கொல்லும் தாழ்த்த இடத்து.- இதில் அமைந்துள்ள அணி எது ?
A.
பிறிது மொழிதல் அணி
B.
வேற்றுமை அணி
C.
உவமை அணி
D.
தற்குறிப்பேற்று அணி
ANSWER :
A. பிறிது மொழிதல் அணி
37.
பகுபத உறுப்புகள் ஆறும் வரும் சொல் :
A.
உரைத்திடும்
B.
புனைந்தோம்
C.
புகலீர்
D.
நடந்தனன்
ANSWER :
D. நடந்தனன்
38.
"துளங்கு இயில் நல் ஏற்றினம் பல களம்புகும்
மன்னர் வனப்பு ஒத்தன" -இடம்பெறும் நூல் .
A.
கலித்தொகை
B.
அகநானூறு
C.
குறுந்தொகை
D.
நற்றிணை
ANSWER :
A. கலித்தொகை
39.
தமிழில் இருந்தே திராவிட என்ற சொல் பிறந்தது எனக் கூறியவர் :
A.
குமரிலப்பட்டார்
B.
கால்டுவெல்
C.
பெஸ்கி
D.
ஹீராஸ் பாரதியார்
ANSWER :
D. ஹீராஸ் பாரதியார்
40.
மிகப் பொருத்தமான விடை எது ?
A.
தமிழ்கெழு கூடல் -புறநானூறு
தமிழ்வேலி-பரிபாடல்
கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழ் -திருவாசகம்
நரம்பின் மறை -தொல்காப்பியம்
B.
தமிழ்கெழு கூடல் - பரிபாடல்
தமிழ்வேலி - புறநானூறு
கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழ் - தொல்காப்பியம்
நரம்பின் மறை - திருவாசகம்
C.
தமிழ்கெழு கூடல் - திருவாசகம்
தமிழ்வேலி - தொல்காப்பியம்
கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழ் - பரிபாடல்
நரம்பின் மறை -புறநானூறு
D.
தமிழ்கெழு கூடல் - தொல்காப்பியம்
தமிழ்வேலி - திருவாசகம்
கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழ் - புறநானூறு
நரம்பின் மறை -பரிபாடல்
ANSWER :
A. தமிழ்கெழு கூடல் -புறநானூறு
தமிழ்வேலி-பரிபாடல்
கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழ் -திருவாசகம்
நரம்பின் மறை -தொல்காப்பியம்