2013 TNTET Paper 1 TET Question Paper

2013 TNTET Paper 1 TET Questions

31.
ஆசிரியப்பாவின் சிற்றெல்லை
A.
2 அடி
B.
3 அடி
C.
நான்கடி
D.
அடி வரையறை இல்லை
ANSWER :
B. 3 அடி
32.

பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
a) நான்காம் வேற்றுமை 1.) ஆக்கல், அழித்தல், ஒத்தல், உடைமை
b) இரண்டாம் வேற்றுமை 2.) நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது
c) ஐந்தாம் வேற்றுமை 3.) கொடை, பகை, நட்பு, முறை
d) மூன்றாம் வேற்றுமை 4.) கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி
A.

4321

B.

2134

C.

3124

D.

1342

ANSWER :

C. 3124

33.
பின்வருவனவற்றுள் எவை இடைச்சொல் அல்ல?
A.
சீசீ, கூகூ, போல, ஏ
B.
கொல், ஐயம், அந்தில், ஆங்கு
C.
ஓடு, தெய்ய, மற்றை, மன்
D.
கலி, கடி, குரை, கிளவி
ANSWER :
D. கலி, கடி, குரை, கிளவி
34.
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
A.
உவமையணி
B.
உருவக அணி
C.
எடுத்துக்காட்டு உவமையணி
D.
பின்வருநிலையணி
ANSWER :
C. எடுத்துக்காட்டு உவமையணி
35.
ஆய்க
1) ஏ முன் உயிர் வர யகரம், வகரம் உடம்படு மெய்யாக வரும்
2) இ, ஈ, ஐ, முன் உயிர் வர வகரம் உடம்படு மெய்யாக வரும்
A.
1 சரி 2 தவறு
B.
1, 2ம் சரி
C.
1 தவறு 2 சரி
D.
1, 2ம் தவறு
ANSWER :
A. 1 சரி 2 தவறு
36.
மன்னர்களை மட்டும் மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றியவர்
A.
நா. பிச்சமூர்த்தி
B.
வல்லிக்கண்ணன்
C.
கு. இராசகோபாலன்
D.
பாரதியார்
ANSWER :
D. பாரதியார்
37.
குமரகுருபரரின் காலம்
A.
பதினாறாம் நூற்றாண்டு
B.
பதினேழாம் நுாற்றாண்டு
C.
பதினெட்டாம் நுாற்றாண்டு
D.
பத்தொன்பதாம் நூற்றாண்டு
ANSWER :
B. பதினேழாம் நுாற்றாண்டு
38.
‘நாஞ்சில் நாடு' என்று அழைக்கப்படும் மாவட்டம்
A.
கோயம்புத்துார் மாவட்டம்
B.
நீலகிரி மாவட்டம்
C.
குமரி மாவட்டம்
D.
திருநெல்வேலி மாவட்டம்
ANSWER :
C. குமரி மாவட்டம்
39.
தமிழ் மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்” என்று கூறியவர்
A.
மாக்சுமுல்லர்
B.
கெல்லட்
C.
அமினோ
D.
டாக்டர் கிரௌஸ்
ANSWER :
D. டாக்டர் கிரௌஸ்
40.
பின்வரும் செய்யுள் வரிகளில் குமரகுருபரர் எழுதியது
A.
“அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த'
B.
“உடலின் உறுதி உடையவரே உலகின் இன்பம் உடையவராம்'
C.
“பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்கே பகைவனுக் கருள்வாய்”
D.
“வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின்”
ANSWER :
D. “வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின்”