2013 TNTET Paper 2-Mathematics and Science TET Question Paper

2013 TNTET Paper 2-Mathematics and Science TET Questions

31.
"பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால் திரிந் தற்று" - இக் குறளின் ஈற்றசை வாய்ப்பாடு யாது ?
A.
நாள்
B.
மலர்
C.
காசு
D.
பிறப்பு
ANSWER :
C. காசு
32.
கீழே உள்ளவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A.
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை -அளவடி
B.
இகழ்வார்ப் பொறுத்தல் தலை -குறளடி
C.
ஆடும்கடைமணி நாஅசை யாமல் அகிலமெங்கும் -நெடிலடி
D.
நன்றே நம்பி குடவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா- கழிநெடிலடி
ANSWER :
B. இகழ்வார்ப் பொறுத்தல் தலை -குறளடி
33.
"காக்க பொருளா அடக்கத்தை"- இவ்வடியோடு தொடர்பில்லாத இலக்கணக் குறிப்பு யாது?
A.
வியங்கோள் வினைமுற்று
B.
இரண்டாம் வேற்றுமை விரி
C.
தொகுத்தல் விகாரம்
D.
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
ANSWER :
D. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
34.
"பஞ்சியொளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க". இச் செய்யுளடியில் உள்ள தொடை விகற்பங்கள் யாவை ?
A.
ஒரூஉ மோனை , இணை எதுகை, இணை இயைபு
B.
இணை மோனை ,பொழிப்பு எதுகை, இணை இயைபு
C.
கூழை மோனை,ஒரூஉ எதுகை, இணைமோனை
D.
பொழிப்பு மோனை ,கூழை எதுகை ,ஒரூஉ இயைபு
ANSWER :
A. ஒரூஉ மோனை , இணை எதுகை, இணை இயைபு
35.

'பனை + ஓலை' - இச் சொற்கள் எவ்விதிகளின்படி புணரும் ?

A.

(i)இ ஈ ஐ யவ்வும்….
(ii) உடல் மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே

B.

(i)ஏனை உயர்வழி வவ்வும்…
(ii)உடல் மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே

C.

(i)தனிக்குறில் முன்னொற் றுயிர்வரின் இரட்டும்
(ii)உடல் மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே

D.

(i)உயிர் வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
(ii)உடல் மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே

ANSWER :

A. (i)இ ஈ ஐ யவ்வும்….
(ii) உடல் மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே

36.

'இராஜ தண்டனை' என்ற வரலாற்று நாடகநூலின் ஆசிரியர்

A.

பாரதிதாசன்

B.

கண்ணதாசன்

C.

வாணிதாசன்

D.

பம்மல் சம்மந்த முதலியார்

ANSWER :

B. கண்ணதாசன்

37.

'ஆர்க்கியாலஜி' என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் தருக.

A.

மண்ணியல் ஆய்வு

B.

கல்வெட்டாய்வு

C.

தொல்லியல் ஆய்வு

D.

விண்ணியல் ஆய்வு

ANSWER :

C. தொல்லியல் ஆய்வு

38.
சொற்பொருளறிக நன்கணியர்
A.
நன்கு நெருங்கி இருப்பவர்
B.
நன்கு கணிப்பவர்
C.
நன்கு செய்பவர்
D.
நன்கு அணிகலன் அணிபவர்
ANSWER :
A. நன்கு நெருங்கி இருப்பவர்
39.

கீழ்க்கண்ட -பாடல் வரிக்கேற்ற சரியான வினாவைத் தேர்க.
' இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை'

A.

இளமை உடம்பு எது?

B.

பிணியின்மை என்பது என்ன?

C.

உடம்பிற்கு எது சிறந்தது

D.

இளமையைக் காட்டிலும் எது சிறந்தது

ANSWER :

D. இளமையைக் காட்டிலும் எது சிறந்தது

40.
கடம் - என்ற சொல்லின் பொருள் தருக
A.
உடம்பு
B.
தோற்கருவி
C.
மிருதங்கம்
D.
மனம்
ANSWER :
A. உடம்பு