TNUSRB SI 2022 AR GT TNUSRB Question Paper

TNUSRB SI 2022 AR GT TNUSRB Questions

11.
தமிழ்ப் பண்பாடு என்ற இதழினைத் தொடங்கியவர் யார் ?
A.
பாரதிதாசன்
B.
பாரதியார்
C.
தனிநாயகம் அடிகள்
D.
முடியரசன்
ANSWER :
C. தனிநாயகம் அடிகள்
12.
"பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்”- என்று கூறியவர் யார் ?
A.
கவிஞர் கண்ணதாசன்
B.
வாணிதாசன்
C.
பாரதிதாசன்
D.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
ANSWER :
D. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
13.

பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
1) முருங்கை i) மடல்
2) நெல் ii) புல்
3) அருகு iii) தாள்
4) தாழை iv) கீரை
A.

iv ii iii i

B.

iv iii ii i

C.

iv i ii iii

D.

i iii iv ii

ANSWER :

B. iv iii ii i

14.
குடும்ப நலத்திட்டம், கலப்புத் திருமணம் போன்றவற்றிற்கு வித்திட்டவர்
A.
திலகர்
B.
அண்ணல் அம்பேத்கர்
C.
வ.உ.சி
D.
பெரியார்
ANSWER :
D. பெரியார்
15.
பானை__________ஒரு சிறந்த கலையாகும்.
A.
செய்தல்
B.
வனைதல்
C.
முடைதல்
D.
சுடுதல்
ANSWER :
B. வனைதல்
16.
கீழ்க்கண்டவற்றுள் எது குமரகுருபரர் பாடிய நூல் ?
A.
முத்துக்குமார சாமி பிள்ளைத்தமிழ்
B.
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
C.
குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்
D.
குலசேகரன் பிள்ளைத் தமிழ்
ANSWER :
A. முத்துக்குமார சாமி பிள்ளைத்தமிழ்
17.
பகைவரை வெற்றிக் கொண்டவரைப் பாடும் இலக்கியம்
A.
கலம்பகம்
B.
பரணி
C.
பரிபாடல்
D.
அந்தாதி
ANSWER :
B. பரணி
18.
கூற்று 1 : தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்களில் பறை இடம் பெறுகிறது.
கூற்று 2 : 'தப்பாட்ட இசை' குறித்துத் தம்பாடலில் பதிவு செய்தவர் அருணகிரிநாதர்.
A.
கூற்று 1 சரி
B.
கூற்று 1 சரி 2 தவறு
C.
கூற்று 2 சரி
D.
கூற்று 1, 2 சரி
ANSWER :
D. கூற்று 1, 2 சரி
19.
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே___________ஆகும்.
A.
கும்மி பாடல்
B.
தாலாட்டுப் பாடல்
C.
நாட்டுப்புறப் பாடல்
D.
விளையாட்டுப் பாடல்
ANSWER :
C. நாட்டுப்புறப் பாடல்
20.
காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை __________ என்பர்.
A.
தாய்மொழி இலக்கியம்
B.
வாய்மொழி இலக்கியம்
C.
நாட்டுப்புற இலக்கியம்
D.
ஏட்டில் எழுதா இலக்கியம்
ANSWER :
B. வாய்மொழி இலக்கியம்