TNUSRB SI 2023 GT TNUSRB Question Paper

TNUSRB SI 2023 GT TNUSRB Questions

1.
சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது ______________ இலக்கணம் ஆகும்.
A.
சொல்
B.
யாப்பு
C.
அணி
D.
எழுத்து
ANSWER :
C. அணி
2.
சரிந்து' - என்ற சொல்லின் சரியான பகுபத பிரிப்பு முறை என்ன ?
A.
சரி + ந் + து
B.
சரி + ந் + த் + உ
C.
சரி + த் (ந்) + து
D.
சரி + த் (ந்) + த் + உ
ANSWER :
D. சரி + த் (ந்) + த் + உ
3.
Volunteer- என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை எழுதுக
A.
சீர்திருத்தவாதி
B.
தொண்டன்
C.
தன்னார்வலர்
D.
சமூகவாதி
ANSWER :
C. தன்னார்வலர்
4.
"அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” இப்பாடலடி இடம் பெற்றுள்ள நூல் எது ?
A.
புறநானூறு
B.
அகநானூறு
C.
நற்றிணை
D.
கலித்தொகை
ANSWER :
C. நற்றிணை
5.
"அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்!"
இப்பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது ?
A.
சிலப்பதிகாரம்
B.
திருக்குறள்
C.
பெரியபுராணம்
D.
மணிமேகலை
ANSWER :
D. மணிமேகலை
6.
தவறான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
A.
கண்டான்
B.
வென்ரான்
C.
நண்டு
D.
வண்டு
ANSWER :
B. வென்ரான்
7.
"சதம்” என்ற சொல்லின் பொருள்
A.
பத்து
B.
நூறு
C.
ஆயிரம்
D.
ஒன்று
ANSWER :
B. நூறு
8.
நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது ________________ ஆகும்.
A.
தோன்றல் விகாரம்
B.
திரிதல் விகாரம்
C.
கெடுதல் விகாரம்
D.
இயல்பு புணர்ச்சி
ANSWER :
A. தோன்றல் விகாரம்
9.
நாவின் மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின் சுவைகள்_________ எனத் தமிழ்விடு தூது கூறுகிறது.
A.
ஐந்து
B.
பத்து
C.
ஆறு
D.
மூன்று
ANSWER :
C. ஆறு
10.
யானைப் போரைப் பாதுகாப்பாகக் காண்பது எப்படி என்று வள்ளுவர் கூறுகின்றார் ?
A.
மலைமேல் நின்று
B.
ஓரமாக நின்று
C.
மரத்தின் மீதேறி
D.
நடுவில் நின்று
ANSWER :
A. மலைமேல் நின்று