TNUSRB SI 2023 GT TNUSRB Question Paper

TNUSRB SI 2023 GT TNUSRB Questions

41.
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை ?
A.
3
B.
2
C.
6
D.
5
ANSWER :
D. 5
42.
திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவை தொடங்க காரணமாக இருந்தவர்
A.
அப்துல் கலாம்
B.
உமர்கயாம்
C.
காயிதேமில்லத்
D.
ஜவஹர்லால் நேரு
ANSWER :
C. காயிதேமில்லத்
43.
பரம்பிக்குளம் ஆனைமலைப் பகுதிகளில் வசிக்கும் காடர்கள், தாங்கள் பேசும் மொழியை _____________ என்று அழைக்கின்றனர்.
A.
கோண்டே
B.
படுகா
C.
வேல் அலப்பு
D.
ஆல் அலப்பு
ANSWER :
D. ஆல் அலப்பு
44.
தொல்காப்பியர் பிறப்பியலில் எழுத்துகள் பிறக்கும் இடங்களை__________ அடிப்படையில் விளக்கியிருப்பதை வெளிநாட்டு அறிஞர்களும் போற்றுகின்றனர்.
A.
மனையியல்
B.
உடற்கூற்றியல்
C.
உயிரியியல்
D.
மானுடவியல்
ANSWER :
B. உடற்கூற்றியல்
45.
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலிசபதம் ஆகிய முப்பெருங் காவியங்களைப் படைத்தவர்
A.
நாமக்கல் கவிஞர்
B.
பாரதிதாசன்
C.
பாரதியார்
D.
அழ. வள்ளியப்பா
ANSWER :
C. பாரதியார்
46.
செய்யுளில் இறுதி எழுத்து அல்லது ஓசை ஒன்றி வரத் தொடுப்பது
A.
மோனை
B.
எதுகை
C.
இயைபு
D.
முரண்
ANSWER :
C. இயைபு
47.
யசோதர காவியத்தின் உட்பிரிவு எவ்வாறு குறிக்கப்படுகிறது ?
A.
காதை
B.
படலம்
C.
இலம்பகம்
D.
சருக்கம்
ANSWER :
D. சருக்கம்
48.
“தென்திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்னும்
அடிகளில் பறவைகள் வலசை வந்த செய்தியைக் கூறியவர் யார் ?
A.
சத்தி முத்தப் புலவர்
B.
கபிலர்
C.
பரணர்
D.
ஒளவையார்
ANSWER :
A. சத்தி முத்தப் புலவர்
49.

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
1) ஓட்டம் i.) முதனிலைத் தொழிற்பெயர்
2) பிடி ii.) தொழிற்பெயர்
3) சூடு iii.) விகுதி பெற்ற தொழிற்பெயர்
4) ஆடல் iv.) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
A.

iii, i, iv, ii

B.

ii, iv, i, iii

C.

i, iv, iii, ii

D.

iv, ii, iii, i

ANSWER :

A. iii, i, iv, ii

50.
Harvest- என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை எழுதுக.
A.
நீர்ப்பாசனம்
B.
உழவு
C.
நெற்பயிர்
D.
அறுவடை
ANSWER :
D. அறுவடை