TNUSRB SI 2022 AR GT TNUSRB Question Paper

TNUSRB SI 2022 AR GT TNUSRB Questions

41.
"நன்றாற்றல்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A.
நன் + றாற்றல்
B.
நன்று + ஆற்றல்
C.
நல்ல + ஆற்றல்
D.
நன்றாற் + றல்
ANSWER :
B. நன்று + ஆற்றல்
42.
திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
A.
திரிந்ததற்று
B.
திரிந்தற்று
C.
திரிந்துற்று
D.
திரிவுற்று
ANSWER :
B. திரிந்தற்று
43.
“எளிது” என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
A.
அரிது
B.
சிறிது
C.
பெரிது
D.
வறிது
ANSWER :
A. அரிது
44.
"இளமை" என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
A.
முதுமை
B.
புதுமை
C.
தனிமை
D.
இனிமை
ANSWER :
A. முதுமை
45.
பின்வருவனவற்றுள் பொருந்தாத சொல்லைக் கண்டறிக
A.
பாவேந்தர்
B.
புரட்சிக்கவி
C.
பகுத்தறிவு
D.
சுப்புரத்தினம்
ANSWER :
C. பகுத்தறிவு
46.
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா ... என்று பாடியவர்
A.
கவிமணி
B.
பாரதியார்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
A. கவிமணி
47.
திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் யார் ?
A.
மணக்குடவர்
B.
பரிமேலழகர்
C.
தருமர்
D.
பரிதி
ANSWER :
A. மணக்குடவர்
48.
"தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்"-- என்று தந்தைப் பெரியாரைப் பாடியவர்
A.
பாரதியார்
B.
பாரதிதாசன்
C.
வாணிதாசன்
D.
கவிமணி
ANSWER :
B. பாரதிதாசன்
49.
“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்" - என்று பாராட்டியவர்
A.
தொல்காப்பியர்
B.
கபிலர்
C.
ஒளவையார்
D.
பரணர்
ANSWER :
C. ஒளவையார்
50.
செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர்
A.
இரா.பி. சேது
B.
வைரமுத்து
C.
கல்கி
D.
சு.வெங்கடேசன்
ANSWER :
A. இரா.பி. சேது