Group 2 2A 2025 September GT TNPSC Question Paper

Group 2 2A 2025 September GT TNPSC Questions

1.
பிழையற்ற அஃறிணைப் பன்மைத் தொடரைக் கண்டறிக.
A.
அவள் அல்லள்
B.
மரம் அன்று
C.
அவை அல்ல
D.
அவன் அல்ல
ANSWER :
C. அவை அல்ல
2.
சரியான தொடரைத் தேர்வு செய்க.
A.
மாடுகள் மேய்ந்தது
B.
பறவைகள் பறந்தது
C.
மரம் வளர்ந்தன
D.
செடி கொடிகள் காற்றில் அசைந்தன
ANSWER :
D. செடி கொடிகள் காற்றில் அசைந்தன
3.
பிழையற்ற தொடரைக் கண்டறிக.
A.
ஆடூஉ வந்தாள்
B.
மகடூ வந்தான்
C.
மகடூ வந்தாள்
D.
சாத்தி வந்தான்
ANSWER :
C. மகடூ வந்தாள்
4.

பொருத்துக:

அடி தாவரம்
(a) தட்டு 1. வேம்பு
(b) கழி 2. மூங்கில்
(c) கழை 3. சோளம்
(d) அடி 4. கரும்பு
A.

3 4 2 1

B.

3 2 4 1

C.

1 2 3 4

D.

4 3 2 1

ANSWER :

A. 3 4 2 1

5.
யானையின் ஒலி மரபைக் கண்டறிக.
A.
அலப்பும்
B.
பிளிறும்
C.
எக்காளமிடும்
D.
கதறும்
ANSWER :
B. பிளிறும்
6.
'மானின்' தொகை மரபுச் சொல்லைக் கண்டறிக.
A.
மந்தை
B.
நிரை
C.
கணம்
D.
கூட்டம்
ANSWER :
C. கணம்
7.
யாதும் ஊரே யாவரும் கேளிர் இப்பாடல் வரியில் "கேளிர்" என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.
A.
சகோதரி
B.
நண்பர்
C.
உறவினர்
D.
பகைவர்
ANSWER :
D. பகைவர்
8.

ஓரெழுத்து ஒரு மொழியைப் பொருத்துக: 

பட்டியல் I பட்டியல் II
(a) க 1. உறுதி
(b) கா 2. கொள்ளுகை
(c) தே 3. பறவை
(d) நி 4. தராசு
A.

4 3 2 1

B.

4 1 3 2

C.

3 4 1 2

D.

3 4 2 1

ANSWER :

D. 3 4 2 1

9.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
A.
செற்றார்
B.
உற்றார்
C.
நண்ணார்
D.
ஒன்னார்
ANSWER :
B. உற்றார்
10.
அகரவரிசைப்படி சொற்களை அமைக்க :
A.
கருவூலம், களத்துமேடு, கவரிமான், கலம்பூச்சு
B.
கவரிமான், கருவூலம், களத்துமேடு, கலம்பூச்சு
C.
கருவூலம், கலம்பூச்சு, கவரிமான், களத்துமேடு
D.
கலம்பூச்சு, கவரிமான், கருவூலம், களத்துமேடு
ANSWER :
C. கருவூலம், கலம்பூச்சு, கவரிமான், களத்துமேடு