Group 2 2A 2025 September GT TNPSC Question Paper

Group 2 2A 2025 September GT TNPSC Questions

21.

பொருத்துக: 

சொற்கள் இலக்கணம்
(a) அது, நாய் 1. அஃறிணை பன்மை
(b) அவர், அவர்கள் 2. உயர்திணைப் பெண்பால் ஒருமை
(c) அவை, நாய்கள் 3. அஃறிணை ஒருமை
(d) தங்கை 4. உயர்திணைப் பன்மை
A.

3 4 1 2

B.

3 1 2 4

C.

2 3 4 1

D.

4 2 3 1

ANSWER :

A. 3 4 1 2

22.
இலஞ்சி' என்ற சொல் எம்மொழிச் சொல்லென்று கண்டறிக.
A.
டச்சு
B.
பிரெஞ்சு
C.
போர்ச்சுகீசியம்
D.
தமிழ்
ANSWER :
C. போர்ச்சுகீசியம்
23.
சுருக்கக் குறியீட்டு விளக்கம் உத்தமம்
A.
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
B.
உலகத் தமிழ் மன்றம்
C.
உலகத் தமிழாராய்ச்சி மன்றம்
D.
உலகத் தமிழ்ச் சங்கம்
ANSWER :
A. உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
24.
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
A.
சாவி
B.
பொத்தான்
C.
சோப்பு
D.
பிண்டம்
ANSWER :
D. பிண்டம்
25.
ஒற்றுப்பிழையைச் சரி செய்க :
வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
A.
வள்ளலார் அருளிய வழிகளை கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
B.
வள்ளலாரருளிய வழிகளைக் கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
C.
வள்ளலார் அருளிய வழிக்களைக் கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
D.
வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப் பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
ANSWER :
D. வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப் பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
26.
பிழையற்ற தொடரைத் தேர்க :
A.
அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவிந்தன. தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவித்தனர்.
B.
அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவித்தனர். தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவித்தனர்.
C.
அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவித்தனர். தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவிந்தனர்.
D.
அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவிந்தனர். தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவிந்தனர்.
ANSWER :
A. அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவிந்தன. தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவித்தனர்.
27.
மோந்து பார்த்தால் வாடிவிடும் அனிச்சம் மலர். என்ன செய்தால் வாடுவர் விருந்தினர்?
A.
வரவேற்கவில்லையானால்
B.
இனியமொழி பேசவில்லையானால்
C.
கடுஞ்சொற்கள் பேசினால்
D.
முகம் திரிந்து நோக்கினால்
ANSWER :
D. முகம் திரிந்து நோக்கினால்
28.
மனைக்கு விளக்கம் மடவார் மடவார் தனக்குத் தகைசால் புதல்வர்;
என்ற அடிகள் இடம்பெறும் நீதி நூலைக் கண்டறிக.
A.
நாலடியார்
B.
திருக்குறள்
C.
இன்னா நாற்பது
D.
நான்மணிக்கடிகை
ANSWER :
D. நான்மணிக்கடிகை
29.
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை' என்ற அடி இடம்பெற்றுள்ள நூல்
A.
நாலடியார்
B.
முதுமொழிக்காஞ்சி
C.
பழமொழி நானூறு
D.
இன்னா நாற்பது
ANSWER :
B. முதுமொழிக்காஞ்சி
30.
ஏலாதியில் கூறப்பட்டுள்ள சமணத்திற்கே உரிய அறக்கருத்து
A.
தீண்டாமை
B.
ஒழுக்கமுடைமை
C.
கொல்லாமை
D.
அறிவுடைமை
ANSWER :
C. கொல்லாமை