Group 2A Combined Tech. Services Exam 2026 August TNPSC Question Paper

Group 2A Combined Tech. Services Exam 2026 August

Group 2A Combined Tech. Services Exam 2026 August TNPSC Questions

21.
சிறுதலைப்பு, நூற்பகுதி எண் முதலிய விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தரும்போது எவ்வகை நிறுத்தற்குறி இடுதல் வேண்டும்?
A.
காற்புள்ளி
B.
முக்காற்புள்ளி
C.
அரைப்புள்ளி
D.
முற்றுப்புள்ளி
ANSWER :
B. முக்காற்புள்ளி
22.
சரியான வினைமுடிவைக் கண்டறிக.
A.
கமலா கத்தினான்
B.
கமலா கத்தினது
C.
கமலா கத்தினாள்
D.
கமலா கத்தின
ANSWER :
C. கமலா கத்தினாள்
23.
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அஃறிணை என்பது ________
A.
பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள்
B.
பறவைகள், மக்கள்
C.
பறவைகள், விலங்குகள், தேவர்கள்
D.
மக்கள், தேவர், நரகர்
ANSWER :
A. பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள்
24.
சரியான திணையைக் கண்டறிக.
A.
அப்பா வயலில் உழுதார்
B.
அம்மா சமைத்தது
C.
நாய் கூட்டமாக வந்தார்கள்
D.
இறைவன் காட்சி கொடுத்தது
ANSWER :
A. அப்பா வயலில் உழுதார்
25.
தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
பகைவர் நீவீர் அல்லர்.
A.
பகைவர் நீவிர் அன்று
B.
பகைவர் நீவிர் அல்லை
C.
பகைவர் நீவீர் அல்லீர்
D.
பகைவர் நீவிர் அல்லன்
ANSWER :
C. பகைவர் நீவீர் அல்லீர்
26.
கலைச்சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்.
ANCHOR
A.
தொகுப்பாளர்
B.
ஓவியர்
C.
வடிவமைப்பாளர்
D.
ஆசிரியர்
ANSWER :
A. தொகுப்பாளர்
27.
'BIOTECHNOLOGY' – என்பதன் கலைச்சொல்.
A.
புறஊதாக் கதிர்கள்
B.
அகச்சிவப்புக் கதிர்கள்
C.
உயிரித் தொழில்நுட்பம்
D.
விண்வெளித் தொழில்நுட்பம்
ANSWER :
C. உயிரித் தொழில்நுட்பம்
28.
'TORNADO' – என்பதற்குச் சரியான கலைச்சொல்.
A.
பெருமழை
B.
காற்றின் வேகம்
C.
சூறாவளி
D.
மண்ணரிப்பு
ANSWER :
C. சூறாவளி
29.
Immigration என்பதன் சட்டவியல் தொடர்பான கலைச்சொல் காண்க.
A.
குடியேற்றம்
B.
உடனடியாக
C.
வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்
D.
ஒழுக்கக்கேடான
ANSWER :
A. குடியேற்றம்
30.
கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்.
REVENUE
A.
வருவாய்
B.
நாவாய்
C.
பொறுப்பு
D.
தனித்துவம்
ANSWER :
A. வருவாய்