Group 2A Combined Tech. Services Exam 2026 August TNPSC Question Paper

Group 2A Combined Tech. Services Exam 2026 August

Group 2A Combined Tech. Services Exam 2026 August TNPSC Questions

31.
பழமொழியின் பொருளறிந்து சரியான தொடரைத் தேர்ந்தெடு.
'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்'
A.
தொட்டிலில் ஆடும் பழக்கம் சுடுகாட்டிலும் உண்டு.
B.
தொட்டிலையும் சுடுகாட்டையும் மட்டுப்படுத்த வேண்டில்.
C.
இளமையில் கைக்கொண்ட பழக்கம் மரணம் வரை தொடரும்.
D.
இளமையும் மரணமும் பழக்கமாகிவிடும்.
ANSWER :
C. இளமையில் கைக்கொண்ட பழக்கம் மரணம் வரை தொடரும்.
32.
சரியான பழமொழியினை பொருளறிந்து தேர்ந்தெடு.
A.
ஆற்றிலும் போடு; அளந்தும் போடு.
B.
ஆற்றிலும் வீட்டிலும் அளந்து போடு.
C.
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.
D.
அளந்து போட்டாலும் ஆற்றில் போடு.
ANSWER :
C. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.
33.
மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க.
A.
கிளி கூவும்
B.
மயில் அகவும்
C.
காகம் அலறும்
D.
கூகை பேசும்
ANSWER :
B. மயில் அகவும்
34.
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
A.
போட்டனர்
B.
வேய்ந்தனர்
C.
கட்டினர்
D.
அடித்தனர்
ANSWER :
B. வேய்ந்தனர்
35.
பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல். (அடுத்த 5 வினாக்கள்)
ஒரு காலத்தில், தேசிய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைக் கொண்ட மாநிலம் என்கிற பெருமை தமிழ்நாட்டுக்கு இருந்தது. சென்னைப் பல்கலைக்கழகம், பாசி உயிரிகளுக்கான ஆய்வுகளில் (Phycology) முன்னோடியாக இருந்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், காலச் சுழற்சி உயிரியல் (Chronobiology) மூலக்கூறு உயிரியல், மரபணுவியல் போன்ற துறைகளில் உலகப் புகழ் பெற்றிருந்தது. கோட்பாட்டு இயற்பியல், பொருள் அறிவியலில் முக்கியப் பங்களிப்புகளை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் செய்துள்ளது. இந்தியாவின் கடற்கரைகள்/உவர் நீரியல் ஆய்வில் அண்ணாமலை பல்கலைக்கழகம் முன்னிலை வகித்தது. இவை தமிழ்நாட்டின் நவீன அறிவியல் மரபைக் கட்டியெழுப்பின.

உலக அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைக் கொண்ட மாநிலம்.
A.
கேரளா
B.
ஆந்திரா
C.
கர்நாடகா
D.
தமிழ்நாடு
ANSWER :
D. தமிழ்நாடு
36.
பாசி உயிரிகளுக்கான ஆய்வுகளில் முன்னோடியாக இருந்த பல்கலைக்கழகம் கண்டறிக.
A.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
B.
பாரதியார் பல்கலைக்கழகம்
C.
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
D.
சென்னைப் பல்கலைக்கழகம்
ANSWER :
D. சென்னைப் பல்கலைக்கழகம்
37.
மரபணுவியலில் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்.
A.
மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம்
B.
பாரதியார் பல்கலைக்கழகம்
C.
சென்னைப் பல்கலைக்கழகம்
D.
அண்ணா பல்கலைக்கழகம்
ANSWER :
A. மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம்
38.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் எத்துறையில் முக்கியப் பங்களிப்புகளை அளித்துள்ளது?
A.
பொருள் அறிவியல்
B.
மூலக்கூறு உயிரியல்
C.
காலச்சுழற்சி உயிரியல்
D.
பாசி உயிரியல்
ANSWER :
A. பொருள் அறிவியல்
39.
இந்தியாவின் கடற்கரைகள்/உவர் நீரியல் ஆய்வில் முன்னிலை வகித்த பல்கலைக்கழகம் கண்டறிக.
A.
அண்ணாமலை பல்கலைக்கழகம்
B.
அண்ணா பல்கலைக்கழகம்
C.
பாரதியார் பல்கலைக்கழகம்
D.
சென்னைப் பல்கலைக்கழகம்
ANSWER :
A. அண்ணாமலை பல்கலைக்கழகம்
40.
'தொன்னூல் விளக்கம்' என்ற இலக்கண நூலை இயற்றியவர் யார்?
A.
ஜி.யு. போப்
B.
வீரமாமுனிவர்
C.
ரா.பி. சேதுப்பிள்ளை
D.
தாராபாரதி
ANSWER :
B. வீரமாமுனிவர்