Group 2A Combined Tech. Services Exam 2026 August TNPSC Question Paper

Group 2A Combined Tech. Services Exam 2026 August

Group 2A Combined Tech. Services Exam 2026 August TNPSC Questions

41.
திரு.வி.க அவர்களின் மொழிநடை 'மலை' எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது என்று பாராட்டுபவர் யார்?
A.
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
B.
தாராபாரதி
C.
முடியரசன்
D.
வீரமாமுனிவர்
ANSWER :
A. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
42.
திராவிட மொழிக்குடும்பத்தின் தொன்மையான மூத்த மொழியாகத் திகழ்கின்ற தமிழ், பிற திராவிட மொழிகளை விட ________ ஆய்வுக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது.
A.
புதுப்பித்துக் கொள்ளும்
B.
ஒப்பியல்
C.
சொல்வள
D.
கல்வெட்டு
ANSWER :
B. ஒப்பியல்
43.
இங்கிலாந்து நாட்டு மகாராணியார் விக்டோரியா, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் ________.
A.
பாரதியார் கவிதைகள்
B.
திருக்குறள்
C.
மூதுரை
D.
மகாபாரதம்
ANSWER :
B. திருக்குறள்
44.
உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழை, அதன் தொன்மையைக் கருதி 'என்றுமுள தென்தமிழ்' என்பவர் யார்?
A.
பாரதியார்
B.
கம்பர்
C.
பாரதிதாசன்
D.
கால்டுவெல்
ANSWER :
B. கம்பர்
45.
Aesthetics – இணையான தமிழ்ச் சொல் தருக.
A.
அழகியல்
B.
நேர்மையியல்
C.
பழமையியல்
D.
உலகியல்
ANSWER :
A. அழகியல்
46.
'கலால்' என்ற சொல் எம்மொழிக்குரியது?
A.
ஹிந்தி
B.
போர்த்துக்கீசியம்
C.
அரபு
D.
தெலுங்கு
ANSWER :
C. அரபு
47.
சரியான இணையை கண்டறிக.
A.
Folder – கோப்பு
B.
Mercy – மனித நேயம்
C.
Pendrive – விரலி
D.
Social Worker – தன்னார்வலர்
ANSWER :
C. Pendrive – விரலி
48.
ஆங்கிலச் சொல்லுக்கான மொழிபெயர்ப்பு.
CHEMICAL TECHNOLOGY
A.
மீ நுண்தொழில்நுட்பம்
B.
உயிரி தொழில் நுட்பம்
C.
வேதியியல் தொழில் நுட்பம்
D.
உயிரியல் தொழில் நுட்பம்
ANSWER :
C. வேதியியல் தொழில் நுட்பம்
49.
குறட்பாவின் அடுத்த அடியை நிறைவு செய்யும் வகையில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்தெழுதுக.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
________.
A.
மாடல்ல எவற்றை யவை
B.
மாடல்ல மற்றை யவை
C.
மாடல்ல மற்றை யாவை
D.
மாடல்ல அவற்றை யவை
ANSWER :
B. மாடல்ல மற்றை யவை
50.
'என்பு தோல் போர்த்த உடம்பு' - யாருக்கு? வள்ளுவர் வழி விடை தருக.
A.
ஒழுக்கமில்லாதவர்க்கு
B.
கல்லாதவர்க்கு
C.
அன்பிலாதவர்க்கு
D.
அன்புடையவர்க்கு
ANSWER :
C. அன்பிலாதவர்க்கு