Group 1 Prelims 2022 November TNPSC Question Paper

Group 1 Prelims 2022 November TNPSC Questions

31.
During which Period Bronze Icons of Nataraja deity with four hands was casted?
எந்த காலகட்டத்தில் நான்கு கைகளுடன் கூடிய நடராஜரின் வெண்கலச் சின்னங்கள் வார்க்கப்பட்டன?
A.
Chera Period
சேரர் காலம்
B.
Chola Period
சோழர் காலம்
C.
Pandiyas Period
பாண்டியர் காலம்
D.
Shunga Period
சுங்க காலம்
ANSWER :
B. Chola Period
சோழர் காலம்
32.

Match the following Acts with its corresponding years:

List I List II
a) Madras Wild Elephants Preservation Act 1.) 1882
b) Tamil Nadu Forest Act 2.) 1980
c) Forest Conservation Act 3.) 1972
d) Wildlife Protection Act 4.) 1873

பின்வரும் சட்டங்களை அதனோடு தொடர்புடைய ஆண்டுகளோடு பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
அ) மத்ராஸ் வன யானைகள் பாதுகாப்புச் சட்டம் 1.) 1882
ஆ) தமிழ்நாடு வனச் சட்டம் 2.) 1980
இ) வன பாதுகாப்புச் சட்டம் 3.) 1972
ஈ) வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 4.) 1873
A.

1,4,3,2

B.

4,1,2,3

C.

2,3,1,4

D.

3,2,4,1

ANSWER :

B. 4,1,2,3

33.
Which of the following statements are true in respect Dr. Muthulakshmi Reddy?
1. She was the first woman in India to get a degree in medicine.
2. She was the first woman Legislator in British India.
3. She was the first female student to be admitted in Maharaja's college.
4. She was the first woman President of the legislative council.
டாக்டர். முத்துலெஷ்மி ரெட்டியைப் பொறுத்தவரை பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
1.இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார்.
2.பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினராவார்.
3.மகாராஜ கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மாணவியாவார்.
4. சட்ட சபையின் முதல் பெண் தலைவராவார்.
A.
1, 2 and 3
B.
2, 3 and 4
C.
1, 3 and 4
D.
1, 2, 3 and 4
ANSWER :
B. 2, 3 and 4
34.
The significance of Tamil Nadu Panchayat Raj (Amendment) Act 2016
தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் (சட்ட திருத்த மசோதா) சட்டம் 2016ன் சிறப்பம்சம்
A.
Modifications in three-tier system
மூன்றடுக்கு முறையில் மாற்றப்பட்டது
B.
Constitution of District Planning Committees
மாவட்ட திட்டக் குழுக்களை அமைத்தது
C.
Transferred specific functions and powers to Panchayats from the State Government
குறிப்பிட்ட அதிகாரங்களை மாநில அரசிலிருந்து பஞ்சாயத்துகளுக்கு மாற்றப்பட்டது
D.
50 percent reservation for women
50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்பட்டது
ANSWER :
D. 50 percent reservation for women
50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்பட்டது
35.
During the early resistance against the British who issued the "Tiruchirappalli Proclamation"
ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆரம்பகால எதிர்ப்பின் போது "திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை' வெளியிட்டவர்
A.
Veerapandia Kattabomman
வீரபாண்டிய கட்டபொம்மன்
B.
Velunachiar
வேலு நாச்சியார்
C.
Maruthu Brothers
மருது சகோதரர்கள்
D.
Puli Thevar
புலித் தேவர்
ANSWER :
C. Maruthu Brothers
மருது சகோதரர்கள்
36.

Match the following:

List I - Name List II - Related to
a) Swami Sahajananda 1.) Oppressed Hindus
b) M.C. Rajah 2.) Tamizhan
c) Pandit Iyothee Thass 3.) Nandanar Kalvi Kazhagam
d) Veeresalingam 4.) The Widows Home

பொருத்துக:

பட்டியல் I - பெயர் பட்டியல் II - தொடர்புடையது
அ) சுவாமி சகஜாநந்தா 1.) அப்ரஸ்டு ஹின்டுஸ்
ஆ) M.C.ராஜா 2.) தமிழன்
இ) பண்டிட் அயோத்திதாசர் 3.) நந்தனார் கல்விக் கழகம்
ஈ) வீரேசலிங்கம் 4.) விதவை இல்லம்
A.

3,1,2,4

B.

1,3,2,4

C.

1,2,3,4

D.

4,1,2,3

ANSWER :

A. 3,1,2,4

37.
Assertion [A] : Human Resources is necessary for the progress of any country.
Reason [R] : Investment in education and health of people can result in a high rate of returns in the future for a country.
கூற்று [A] : எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனித வளம் அத்தியாவசியமாக இருக்கிறது.
காரணம் [R] : கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக நாட்டின் எதிர் காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.
A.
Both [A] and [R] are true and [R] explains [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரியானது மற்றும் [R], [A]வை விளக்குகிறது
B.
Both [A] and [R] are true and [R] does not explain [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரியானது [R], [A]வை விளக்கவில்லை
C.
[A] is correct and [R] is false
[A] சரியானது மற்றும் [R] தவறானது
D.
[A] is false and [R] is true
[A] தவறானது மற்றும் [R] சரியானது
ANSWER :
A. Both [A] and [R] are true and [R] explains [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரியானது மற்றும் [R], [A]வை விளக்குகிறது
38.
Which among the following institutions secured no. 1 overall rank according to national institutional ranking framework?
பின்வரும் நிறுவனங்களில் எது தேசிய நிறுவன தர கட்டமைப்பின் படி ஒட்டுமொத்த தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது?
A.
IIT, Madras
IIT, சென்னை
B.
IISC, Bangalore
IISC, பெங்களூர்
C.
AIIMS, Delhi
AIIMS, டெல்லி
D.
IIT, Bombay
IIT, மும்பை
ANSWER :
A. IIT, Madras
IIT, சென்னை
39.

Match:

List I - Tinais List II - Their Gods
a) Kurinji 1.) Kali
b) Mullai 2.) Murugan
c) Marudam 3.) Indra
d) Palai 4.) Tirumal

பொருத்துக:

பட்டியல் I - திணை பட்டியல் II - கடவுள்
அ) குறிஞ்சி 1.) காளி
ஆ) முல்லை 2.) முருகன்
இ) மருதம் 3.) இந்திரன்
ஈ) பாலை 4.) திருமால்
A.

3,4,1,2

B.

1,3,4,2

C.

2,4,3,1

D.

4,2,3,1

ANSWER :

C. 2,4,3,1

40.
Gandhiji established as ashram at Sabarmathi. Likewise an ashram was established in Tamil Nadu by Rajaji. Where was it established?
காந்தியடிகள் சபர்மதி என்னும் இடத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். அதே போல் இராஜாஜி தமிழகத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். எங்கே அதை உருவாக்கினார்?
A.
Madurai
மதுரை
B.
Vedaranyam
வேதாரண்யம்
C.
Salem
சேலம்
D.
Thiruchengodu
திருச்செங்கோடு
ANSWER :
D. Thiruchengodu
திருச்செங்கோடு