Group 1B and 1C Prelims 2026 March TNPSC Question Paper

Group 1B and 1C Prelims 2026 March

Group 1B and 1C Prelims 2026 March TNPSC Questions

21.
Which of the following is/are important characteristic commonly found in effective school management?
(i) Mastery over subject knowledge
(ii) Leadership and management
(iii) Effective Communication
(iv) Interpersonal skills
பின்வருவனவற்றில் திறமையான பள்ளி நிர்வாகத்தில் பொதுவாகக் காணப்படும் முக்கியமான அம்சம் எது?
(i) பாட அறிவின் மீது தேர்ச்சி
(ii) தலைமை மற்றும் மேலாண்மை
(iii) பயனுள்ள தொடர்பு
(iv) தனிப்பட்ட திறன்கள்
A.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
B.
(iv) only
(iv) மட்டும்
C.
(ii) only
(ii) மட்டும்
D.
(ii), (iii) and (iv) only
(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
ANSWER :
D. (ii), (iii) and (iv) only
(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
22.
Assertion [A] : As per the legislations of the Education Department, a teacher should not punish the child by kicking, pinching, hitting or in any way that causes physical harm.
Reason [R] : It is best to have an intention to correct; but the method of correction should not cause harm.
வாக்கியம் [A] : கல்வித்துறை சட்டத்திட்டங்களின்படி உடலை வருத்துமாறு உதைத்தல், கிள்ளுதல், குட்டுதல் போன்ற எந்தவகைத் தண்டனையும் ஆசிரியர் குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது.
காரணம் [R] : திருத்தும் எண்ணம் சிறந்தது. ஆயினும் திருத்தும் முறை தீங்கு விளைவிக்கக் கூடாது.
A.
[A] is true, but [R] is false
[A] சரி, ஆனால் [R] தவறு
B.
Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டுமே சரி, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்
C.
[A] is false, but [R] is true
[A] தவறு, [R] சரி
D.
Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டுமே சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
ANSWER :
B. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டுமே சரி, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்
23.
Arrange the following functions of Education Management in chronological order.
(1) Organizing
(2) Controlling
(3) Directing
(4) Staffing
(5) Planning
(6) Coordination
கல்வி நிர்வாகத்தின் செயல்பாடுகளை சரியாக வரிசைப்படுத்துக
(1) அமைத்தல்
(2) கட்டுப்படுத்தல்
(3) இயக்குதல்
(4) பணியமர்த்தல்
(5) திட்டமிடல்
(6) ஒருங்கிணைத்தல்
A.
5, 2, 6, 3, 4, 1
B.
1, 5, 6, 3, 2, 4
C.
6, 5, 4, 3, 1, 2
D.
5, 1, 4, 3, 2, 6
ANSWER :
D. 5, 1, 4, 3, 2, 6
24.
Which of the following pairs are incorrectly matched?
(1) CABE – Central Advisory Board of Education.
(2) CIET – Central Institute of Education and Training
(3) NIEPA – National Institute of Educational Planning and Administration
(4) NCERT – National Commission for Educational Research and Training
பின்வரும் இணைகளில் எந்த இணைகள் தவறாக பொருத்தப்பட்டுள்ளன?
(1) CABE – மத்திய கல்வி ஆலோசனை வாரியம்
(2) CIET – மத்திய கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
(3) NIEPA – தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனம்
(4) NCERT – தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆணையம்
A.
(1) and (3)
(1) மற்றும் (3)
B.
(2) and (4)
(2) மற்றும் (4)
C.
(2) and (3)
(2) மற்றும் (3)
D.
(1) and (4)
(1) மற்றும் (4)
ANSWER :
B. (2) and (4)
(2) மற்றும் (4)
25.
The primary function of a School Management Committees (SMCs) is to ________.
பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) முதன்மைப் பணி
A.
Conduct exams
தேர்வுகளை நடத்துதல்
B.
Monitor student attendance only
மாணவர் வருகையை மட்டுமே கண்காணித்தல்
C.
Involve community in school decision-making
பள்ளி முடிவெடுப்பில் சமூக பங்கேற்பை உறுதி செய்தல்
D.
Issuing textbooks and academic journals
பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி இதழ்களை வெளியிடுதல்
ANSWER :
C. Involve community in school decision-making
பள்ளி முடிவெடுப்பில் சமூக பங்கேற்பை உறுதி செய்தல்
26.
Which of the following is considered a key principle of educational leadership?
பின்வருவனவற்றில் கல்வித் தலைமையின் முக்கிய கொள்கையாகக் கருதப்படுவது எது?
A.
Punitive discipline
தண்டனைமிக்க ஒழுக்கம்
B.
Centralized decision-making
மையப்படுத்தப்பட்ட முடிவெடுப்பு
C.
Vision building and motivation
தொலைநோக்கப் பார்வை கட்டமைத்தல் மற்றும் ஊக்கமளித்தல்
D.
Budget reduction
பட்ஜெட் குறைத்தல்
ANSWER :
C. Vision building and motivation
தொலைநோக்கப் பார்வை கட்டமைத்தல் மற்றும் ஊக்கமளித்தல்
27.
The techniques to evaluate the social adjustment of the pupil is ________.
மாணவர்களின் சமூக இணக்கத்தினை ________ மூலம் மதிப்பீடு செய்யலாம்
A.
Guess who Technique
யார் என்று கண்டுபிடிக்கும் யுக்தி
B.
Sociometric Technique
சமூக உறவு முறை யுக்தி
C.
Projective Technique
திட்டமிட்ட (உபாயம்) முறை யுக்தி
D.
Rating Technique
விகித நிர்ணய முறை யுக்தி
ANSWER :
B. Sociometric Technique
சமூக உறவு முறை யுக்தி
28.
To know the Individual's Problem, ________ interview method is suitable.
தனிமனிதனின் பிரச்சனையை அறிய, ________ நேர்காணல் முறை பொருத்தமானது.
A.
Diagnostic
குறையறி
B.
Clinical
மருத்துவ
C.
Panel
குழு முறை
D.
Focussed
மைய முறை
ANSWER :
A. Diagnostic
குறையறி
29.
An evaluation to assess the learning progress during instruction is called ________.
கற்பித்தலின் போது கற்றலின் வளர்ச்சியை மதிப்பீடு செய்யும் முறையானது ________ ஆகும்
A.
Norm-Referenced Evaluation
தர இயல்பு மதிப்பீடு
B.
Summative Evaluation
முற்று நிலை மதிப்பீடு
C.
Formative Evaluation
தொடர் நிலை மதிப்பீடு
D.
Criterion Referenced Evaluation
சிறப்பு இயல்பு மதிப்பீடு
ANSWER :
C. Formative Evaluation
தொடர் நிலை மதிப்பீடு
30.
The aim of Education at a basic level is ________.
கல்வியின் அடிப்படை நோக்கமானது ________ ஆகும்.
A.
Personality development of individual
தனிமனிதனின் ஆளுமை வளர்ச்சி
B.
Economic development of the society
சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சி
C.
Political development of the nation
நாட்டின் அரசியல் வளர்ச்சி
D.
Cultural development of the country
தேசத்தின் பண்பாடு வளர்ச்சி
ANSWER :
A. Personality development of individual
தனிமனிதனின் ஆளுமை வளர்ச்சி