Group 4 2025 July TNPSC Question Paper

Group 4 2025 July TNPSC Questions

11.

சரியான விடைக் குறிப்பைத் தேர்க :
கூற்று : 'தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும்.
காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையில் 'ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது.

A.

கூற்று – சரி; காரணம் – தவறு

B.

கூற்று – தவறு; காரணம் – சரி

C.

கூற்று – சரி; காரணம் – சரி

D.

கூற்று – தவறு; காரணம் – தவறு

ANSWER :

D. கூற்று – தவறு; காரணம் – தவறு

12.
பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
A.
அங்குக்கேட்டேன்
B.
அங்கு கேட்டேன்
C.
இங்கு பேசாதே
D.
எங்கு சென்றாய்
ANSWER :
A. அங்குக்கேட்டேன்
13.

காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி இவற்றை அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

A.

அம்புலி, காப்பு, சப்பாணி, தால், செங்கீரை, முத்தம், வருகை

B.

அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, முத்தம், தால், வருகை

C.

அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை

D.

அம்புலி, காப்பு, செங்கீரை, சப்பாணி, தால், முத்தம், வருகை

ANSWER :

C. அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை

14.
பிழை திருத்துக:
கூற்று : ஒரு அணில் மரத்தில் ஏறியது.
காரணம் :உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னர் "ஓர்” பயன்படுத்த வேண்டும்.
A.
கூற்று - சரி; காரணம் - தவறு
B.
கூற்று - தவறு; காரணம் - சரி
C.
காரணம், கூற்று - இரண்டும் சரி
D.
கூற்று, காரணம் - இரண்டும் தவறு
ANSWER :
B. கூற்று - தவறு; காரணம் - சரி
15.

ஊர்ப் பெயர்களோடு மரூஉ சொற்களைப் பொருத்துக: 

பட்டியல் I பட்டியல் II
(a) தேவகோட்டை 1. கோவை
(b) கோவன்புத்தூர் 2. சோணாடு
(c) பூந்தமல்லி 3. தேவோட்டை
(d) சோழநாடு 4. பூனமல்லி
A.

1 2 3 4

B.

3 1 4 2

C.

2 1 4 3

D.

4 3 2 1

ANSWER :

B. 3 1 4 2

16.
இரு பொருள் தருக : 'தாரணி'
A.
சூரியன், உலகம்
B.
கதிரவன், மதி
C.
கடல், பூமி
D.
பூமி, உலகம்
ANSWER :
D. பூமி, உலகம்
17.
ஒரு பொருட் பன்மொழியில் "மீமிசை ஞாயிறு" என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளைக் கண்டறிக.
A.
பக்கப்பகுதி
B.
கீழ்ப்பகுதி
C.
நடுப்பகுதி
D.
மேல்பகுதி
ANSWER :
D. மேல்பகுதி
18.
பொருந்தா சொல்லைக் கண்டறிதல்.
முரல், வகுலி, வாளை, வியாளம்
A.
முரல்
B.
வகுலி
C.
வாளை
D.
வியாளம்
ANSWER :
D. வியாளம்
19.
நன்னூல் குறிப்பிடும் ஓரெழுத்து ஒரு மொழிகள் 42 ஆகும். கழகத் தமிழ் அகராதி (1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925), வெற்றித் தமிழ் அகராதி (1992), ஆகிய இம்மூன்று அகராதிகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை?
A.
42
B.
40
C.
82
D.
70
ANSWER :
D. 70
20.

.......... ............... உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!
இப்பாடல் வரியில் உள்ள எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.

A.

மடவம் × மடந்தை

B.

உரவோர் ஆயின் × உரவோர் ஆக

C.

உரவோர் X மடந்தை

D.

உரவோர் X மடவம்

ANSWER :

D. உரவோர் X மடவம்