Group 4 2025 July TNPSC Question Paper

Group 4 2025 July TNPSC Questions

21.
ஒருவர் அல்லது நூல் கூறும் கூற்றை விளக்குமிடத்து பயன்படுத்த வேண்டிய நிறுத்தற்குறியைக் கண்டறிக.
A.
காற்புள்ளி
B.
அரைப்புள்ளி
C.
முக்காற்புள்ளி
D.
முற்றுப்புள்ளி
ANSWER :
C. முக்காற்புள்ளி
22.

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
(a) சாந்து 1. இழிதல்
(b) குருவி 2. குடை
(c) சுனை 3. ஓப்பு
(d) அருவி 4. அரை
A.

4     3     2     1

B.

4     1     3     2

C.

 2     4     1     3

D.

4     2     1     3

ANSWER :

A. 4     3     2     1

23.
ஒலி மரபைக் கண்டறிக.
"புள்"
A.
நரலும்
B.
கருவும்
C.
சிமிழ்க்கும்
D.
சீறும்
ANSWER :
C. சிமிழ்க்கும்
24.
பிழையற்ற நிகழ்காலத் தொடரைக் கண்டறிக.
A.
கண்ணன் நேற்று வருவான்
B.
அன்பு நாளை வந்தான்
C.
கவின்மொழி வருவாள்
D.
பூமி சுழல்கிறது
ANSWER :
D. பூமி சுழல்கிறது
25.
கூற்று : யானைகள் விரைந்து ஓடியது.
காரணம் : யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு 'அது' என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும்.
A.
கூற்று - சரி; காரணம் - சரி
B.
கூற்று - தவறு: காரணம் - சரி
C.
கூற்று சரி; காரணம் - தவறு
D.
கூற்று - தவறு; காரணம் - தவறு
ANSWER :
D. கூற்று - தவறு; காரணம் - தவறு
26.
பிறவினைத் தொடரைக் கண்டறிக
A.
அன்பு பாடல் பாடினான்
B.
கவின்மொழி திருக்குறள் கற்றாள்.
C.
அடிகள் மறை ஓதினார்.
D.
அரசன் மாலை அணிவித்தான்.
ANSWER :
D. அரசன் மாலை அணிவித்தான்.
27.

எவ்வகை வினை என்பதைக் கண்டறிக :
இரண்டாம் வேற்றுமையில் இருப்பது முதல் வேற்றுமையாகவும், முதல் வேற்றுமையில் இருப்பது மூன்றாம் வேற்றுமையாகவும் மாறும் வினை எப்போது நிகழும்

A.

செய்வினை செயப்பாட்டு வினையாக மாறும்போது

B.

செயப்பாட்டு வினை செய்வினை பாக மாறும்போது

C.

தன்வினை பிறவிளையாக மாறும்போது

D.

பிறவினை தன்வினையாக மாறும்போது

ANSWER :

A. செய்வினை செயப்பாட்டு வினையாக மாறும்போது

28.

வரலாற்றியலில் 'Whitehall' என்னும் சொல்லிற்கு இணை கண்டறிக.

A.

வெள்ளை மாளிகை - அமெரிக்கா

B.

ரஷ்ய - மாளிகை

C.

வாடிகள் - மாளிகை

D.

பிரிட்டானிய அரச அலுவவகம்

ANSWER :

D. பிரிட்டானிய அரச அலுவவகம்

29.

இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக 

பட்டியல் I பட்டியல் II
(a) Dark Fiber 1. பின்னணி நிரவ்
(b) Demon 2. அடர்த்தி
(c) Darkest 3. மிகு இருள்மை
(d) Density 4. இருட்டு இழை
A.

4 2 3 1

B.

4 1  3 2

C.

1 3 4 2

D.

2 4 1 3

ANSWER :

B. 4 1 3 2

30.
புவியியலில் "Advance" என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக.
A.
ஃபெல்ஸ்பார் கனிமவகை
B.
கடற்கரையியக்கம்
C.
பெரும் நில அதிர்விற்குப் பிறகான சிறு அதிர்வுகள்
D.
வியாழனின் துணைக்கோள்
ANSWER :
B. கடற்கரையியக்கம்