Group 4 2025 July TNPSC Question Paper

Group 4 2025 July TNPSC Questions

41.

Adoring என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தமிழ்ச்சொல் கண்டறிக.

A.

முன்னேறுதல்

B.

ஒப்புக்கொடுத்தல்

C.

போற்றுதல்

D.

துணை நிற்றல்

ANSWER :

C. போற்றுதல்

42.
தோழன் என்று பொருள் தரும் காம்ரேட் என்ற சொல் எம்மொழியில் இருந்து பெறப்பட்டது?
A.
ஜப்பான் மொழி
B.
சீன மொழி
C.
போர்த்துக்கீசிய மொழி
D.
பிரெஞ்சு மொழி
ANSWER :
D. பிரெஞ்சு மொழி
43.

சரியான இணையைக் கண்டறிக :
(1) தாராபாரதி - ஆசியஜோதி
(2) முடியரசன்  - வீரகாவியம்
(3) கவிமணி - இதய ஒலி
(4) இரசிகமணி - விரல் நுனி வெளிச்சங்கள்

A.

(2) - சரி

B.

(1)- சரி

C.

(4)- சரி

D.

(3) - சரி

ANSWER :

A. (2) - சரி

44.
‘பூட்கை' என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
A.
படுக்கை
B.
உடல்
C.
குறிக்கோள்
D.
மலை
ANSWER :
C. குறிக்கோள்
45.

உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் _________.

A.

இரா. இளங்குமரனார்

B.

க. அப்பாத்துரையார்

C.

தேவநேயப் பாவாணர்

D.

சி. இலக்குவனார்

ANSWER :

C. தேவநேயப் பாவாணர்

46.
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக.
A.
கோலாமி
B.
பர்ஜி
C.
கொண்டா
D.
கண்ணெழுத்துகள்
ANSWER :
D. கண்ணெழுத்துகள்
47.
ஏலாதியில் இடம் பெறாத மருந்துப் பொருள்
(1) சுக்கு
(2) திப்பிலி
(3) கண்டங்கத்திரி
(4) சிறுநாவற்பூ
A.
(1) மட்டும்
B.
(2) மட்டும்
C.
(3) மட்டும்
D.
(4) மட்டும்
ANSWER :
C. (3) மட்டும்
48.
பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க.
"தூற்றின் கண் தூவிய வித்து"
A.
பழமொழி நானூறு
B.
மூதுரை
C.
நாலடியார்
D.
திரிகடுகம்
ANSWER :
D. திரிகடுகம்
49.
கூற்று [A] : அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே.
காரணம் [R] : ஒருவருக்கு அதனை விடச் சிறந்த செல்வம் வேறு உண்டு
A.
[A] சரி [R] தவறு
B.
[A] மற்றும் [R] இரண்டும் சரி
C.
[A] மற்றும் [R] இரண்டும் தவறு
D.
[A] தவறு [R] சரி
ANSWER :
A. [A] சரி [R] தவறு
50.

சரியான சொற்றொடரைத் தேர்வு செய்து கீழ்க்காணும் தொடரை நிறைவு செய்க.
தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச் சொல்ல வல்லவர் ________.

A.

கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்

B.

பிறர் மனத்தில் நன்கு பதியும்படி சொல்லுவார்

C.

முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவார்

D.

அரிய செயல்களை விரைந்து செய்து முடிப்பார்

ANSWER :

A. கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்